கீழ் காணும் சித்தர் துதியினை ஒரு வருடத்திற்கு தினமும் இருமுறை ஜபித்து வரவும்.
நிச்சயம் பலன் கிடைக்கும்.
சித்தர் துதி:
ஓம் அகத்தீசாய நம :
ஓம் நந்தீசாய நம :
ஓம் திருமூல தேவாய நம :
ஓம் கருவூர் தேவாய நம :
ஓம் ராமலிங்க தேவாய நம :
·கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர
· காலையில் தினமும் குளித்தவுடன் சிறிது சர்க்கரையை
வெளி வாசலில் தூவவும். இதை சிறு பூச்சிகள் மற்றும் எறும்புகள் உண்ணும்போது உங்கள் கஷ்டங்கள் சிறிது சிறிதாக விலகுவதுடன் உங்களுக்கு
மன அமைதியை தரும்.
· எவ்வளவு பெரிய கடன் சுமை இருந்தாலும் காஞ்சிபுரத்தில் அமர்ந்து அருள் பாலித்துவரும் காமாட்ஷி அம்மனை, ஒரு வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தில் பட்டு புடவை சாற்றி வழிபடுவோர்க்கு, நிச்சயம் கடன் சுமையில் இருந்து மீட்டு சகல வளமுடன் மன நிறைவான வாழ்வினை தருவாள் என்பது ஐதீகம்.
· தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் சன்னதியில் குங்குமம் கொடுத்து வரவும். அத்துடன் தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபட கடன் தொல்லையிலிருந்து நிரந்தரமாக விடுபடுவீர்கள்.
· கோதுமை மாவில் 7 துளசி இலைகள் மற்றும் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
இந்த மாவு வீட்டில் இருக்கும்
போது பண கஷ்டம் உங்களை அண்டாது.
.
Comments
Post a Comment