Posts

Showing posts from December, 2017

ஸ்ரீ லஷ்மி ஸ்லோகம்

Image
ஸ்ரீ லஷ்மி ஸ்லோகம் நமது வீடுகளில் மகாலஷ்மி கடாட்க்ஷம் பரிபூரணமாக இருக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை கூறி வந்தால் வற்றாத செல்வ வளம் நமது வீடுகளில் நிறையும். அச்வாரூடம் மஹாலக்ஷ்மீம் த்வி நேத்ரஞ்ச சதுர்புஜம் ஸ்வர்ணாங்கீம் ஹரிவல்லாபாம் பீ நஸிம நஸீ சோபிதாம் ! ஸர்வாபரண ஸம்யுக்தாம் துகூலாம்பர தாரிணீம் ஐஸ்வர்யதாம்தாம் ஸ்ரீலக்ஷ்மீம் ஸர்வ ஸொபாக்ய ஸித்தயே இந்த ஸ்லோகத்தை வாசிக்க இயலாதவர்கள், கீழ்க்கண்ட பிரார்த்தனையை பக்தியுடன் தினமும் மூன்று முறை வாசித்தாலே போதுமானது. குதிரையின் மேல் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மியே !  இரண்டு கண்களையும் நான்கு கைகளையும் உடையவளே !  தங்கம் போல் மஞ்சள் நிறமான பிரகாசமான உடலை கொண்டவளே ! செல்வத்தைத் தரும் ஐஸ்வர்யலக்ஷ்மியே !  எங்களுக்கு சகல சௌபாக்கியத்தையும் தந்தருள்வாயாக.
Image
எப்போதும் வீட்டில் லக்ஷ்மி காடாக்ஷ்மும் , எக்குறையும் இல்லாமல் வீட்டில் அனைவரும்   நல்ல உணவுடன் ஆரோக்யமாக இருக்க , அன்னபூரணியை ஆராதிக்க வேண்டிய ஸ்லோகம் . அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராணவல்லபே ஞானவைராக்கிய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹிச பார்வதி !!!

வெளியே கிளம்பும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

வெளியே கிளம்பும் போது எப்போதும் 9 முறை பாராயணம் செய்து விட்டு கிளம்பினால் கார்ய ஜயம் வனமாலீ கதி சார்ங்கீ ச்ஙகீ சக்ரீச நந்தகீ ஸ்ரீமான் நாராயணோ விஷ்ணுர் வாசுதேவோபி ரக்ஷது 

35 காயத்ரி மந்திரங்கள்! : 35 GAYATRI MANTRAS !

Image
35 காயத்ரி மந்திரங்கள் ! :   35 GAYATRI MANTRAS ! விசுவாமித்திரரால் அருளப்பட்ட இந்த காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது .   ` காயத்திரி ’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “ காயத்திரி மந்திரம் ” என்ற பெயர் ஆயிற்று .   ஓம் பூர் : புவ : ஸுவ : தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ : யோந : ப்ரசோதயாத் ..! காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு . இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும் , நடுப்பகலில் சாவித்ரிக்காகவும் ,  மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது . காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன . மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம் . காயத்ரி ஜபம் செய்யாத   எந்த ஜபமும் , ஆராதனையும் பயனற்றது .   1. வினாயகர் காயத்ரி ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி : ப்ரசோதயாத் . ...